மீண்டு(ம்) எழுச்சி கண்ட சந்தை
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகிறது. வட்டி விகிதம் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக, வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன • வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பங்குச் சந்தை குறியீடுகள், திசையறியாத நிலையில் துவங்கின. ஆனால், எச்.டி.எப்.சி வங்கி, ரிலையன்ஸ் மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு அதிகரித்ததால், பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன • நிப்டி 50 குறியீட்டில், உலோகத்துறை பங்குகள் தவிர்த்து, அனைத்து துறை பங்குகளும் உயர்வுடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக, ஆறு நாட்கள் வீழ்ச்சி கண்ட குறியீடுகள், ஒரு சதவீதம் ஏற்றத்துடன் நிறைவு செய்தன• தொடர்ச்சியாக பங்குகளை விற்று வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு நடவடிக்கை தொடர வாய்ப்புள்ளதால், மீண்டும் பங்குகளை வாங்க துவங்கி இருப்பதாக, சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று, ------5,730 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.84 சதவீதம் சரிந்து, 79.44 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 83.97 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டிரென்ட் பெல் அதானி என்டர்பிரைசஸ் அதானி போர்ட்ஸ் மஹிந்திரா & மஹிந்திரா அதிக இறக்கம் கண்டவை எஸ்.பி.ஐ.,லைப் டாடா ஸ்டீல் டைட்டன் பஜாஜ் பின்சர்வ் ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல்