உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஆகாசா ஏர் நிறுவனத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்

ஆகாசா ஏர் நிறுவனத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்

புதுடில்லி:மத்திய நிதி அமைச்சகம் 'ஆகாசா ஏர்' விமான நிறுவனத்தை, நாட்டின் நியமிக்கப்பட்ட விமான நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. வரும் மார்ச் மாதம் 28ம் தேதி ஆகாசா ஏர், மும்பையிலிருந்து தோஹா வரையிலான அதன் முதல் வெளிநாட்டு விமான சேவையை துவங்கவுள்ள நிலையில் இந்த அங்கீகாரம் அதற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மத்திய விற்பனை வரி பிரிவு 5, உட்பிரிவு 5ன் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி வெளிநாட்டு சேவைகளுக்கு பயன்படுத்தும் விமானங்களுக்கு வாங்கும் விமான எரிபொருளுக்கு, ஆகாசா ஏர், ஏற்றுமதி வரி செலுத்த தேவையில்லை. இதிலிருந்து விலக்கு அளிக்கப் படும்.கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட ஆகாசா ஏர் நிறுவனம், 19 மாதங்களிலேயே வெளிநாட்டு விமான சேவைகளை துவங்கிஉள்ளது. இதன் வாயிலாக, அதிவேகமாக வெளிநாட்டு விமான சேவைகளை துவங்கிய இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஆகாசா ஏர் பெற்றுள்ளது.அரசின் விதிமுறைகளின் படி, 20 விமானங்களைக் கொண்ட விமான நிறுவனங்கள் வெளிநாட்டு விமான சேவையை துவங்கலாம். ஆகாசா ஏர் நிறுவனத்துக்கு தற்போது 23 விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை