மேலும் செய்திகள்
கொளுத்தும் வெயில்; பாத்திர உற்பத்தி பாதிப்பு
26-Apr-2025
புதுடில்லி:எத்தனால் உற்பத்திக்காக, உபரி இருப்பில் இருந்து 28 லட்சம் டன் அரிசியை, எரிபொருள் உற்பத்தி ஆலைகளுக்கு வழங்க, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எப்.சி.ஐ., எனப்படும் இந்திய உணவு கழகத்தின் மத்திய தொகுப்பில் உபரியாக உள்ள அரிசியில் இருந்து 28 லட்சம் டன்னை, குவின்டால் 2,250 ரூபாய் என்ற மானிய விலையில், எத்தனால் உற்பத்திக்கு, மத்திய உணவுத்துறை ஒதுக்கியுள்ளது. அதிகப்படியான கையிருப்பை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய ஒதுக்கீடு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 24 லட்சம் டன்னுடன் சேர்த்து, கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை அரிசி, வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை வழங்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது-. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 1,000 கோடி லிட்டர் உயிரி எரிபொருளில், 65 சதவீதத்தை, தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர். மீதமுள்ளவை கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீஹார், மேற்குவங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தானியங்கள் அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்கள், மக்காச்சோளம் அல்லது அரிசியை எத்தனால் தயாரிப்புக்கான முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர்.
26-Apr-2025