உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தை கையகப்படுத்தியது கோவை.கோ ஏ.ஐ., சேவையை அதிகரிக்க முயற்சி

பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தை கையகப்படுத்தியது கோவை.கோ ஏ.ஐ., சேவையை அதிகரிக்க முயற்சி

கோவை:கோவையைச் சேர்ந்த, மென்பொருள் சேவை நிறுவனமான கோவை.கோ, பெங்களூரைச் சேர்ந்த 'ப்ளோய்க்' நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேலாண்மையில், மென்பொருள் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று கோவை.கோ. கடந்த 2022ல் துவங்கப்பட்ட, 'எலிவேஷன் கேப்பிடல்' குழுமத்தைச் சேர்ந்த ப்ளோய்க் நிறுவனத்தை கோவை.கோ நிறுவனம் தற்போது கையகப்படுத்தியுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சரவண குமார் தெரிவித்துள்ளார்.மென்பொருள் தீர்வுகள் குறித்து படிப்படியான வழிகாட்டி வீடியோக்களை வெளியிடும் ப்ளோய்க் நிறுவனத்துக்கு, தற்போது 8,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அண்மையில், 27 கோடி ரூபாய் நிதி திரட்டிய நிலையில், கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிறுவனத்தை, கோவை.கோ நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. எனினும், இதற்கான தொகை குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.உலகம் முழுதும் 2,500க்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களால், கோவை.கோ நிறுவனத்தின் 'டாக்குமென்ட்360' மேலாண்மை மென்பொருள் பயன்படுத்தப்படும் நிலையில், ப்ளோய்க் நிறுவனத்தின் திறனையும் ஒருங்கிணைப்பதன் வாயிலாக, சிறந்த தீர்வுகளை வழங்க முடியும் என, சரவண குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை