வங்கிகள் கடன் வழங்கல் பெருநகரங்களில் சரிவு
நாட்டின் பெருநகரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் குறைந்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கை:கடந்த மார்ச் மாதத்தில், பெருநகரங்களின் வங்கிக் கிளைகள் வாயிலாக வழங்கப்பட்ட கடன், மொத்த கடனில் 58.70 சதவீதமாக குறைந்தது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன், 63.50 சதவீதமாக இருந்தது.கிராமப்புற, நடுத்தர நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகள் வாயிலாக கடன் வழங்குவதில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம். டிபாசிட்களை பொறுத்தவரை, கிராமப்புற, நடுத்தர நகர வங்கிக் கிளைகளைவிட, மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகள் அதிக தொகை திரட்டியுள்ளன.
டிபாசிட் ஆண்டு வளர்ச்சி
( மார்ச் 2025) பெரு நகரங்கள்: 11.70% கிராமப்புறம்: 10.10%நடுத்தர நகரங்கள்: 8.90%
வங்கி கடன் வளர்ச்சி
2023-24: 15.30% 2024-25: 11.10
டிபாசிட் வளர்ச்சி
2023-24: 13.00% 2024-25: 10.60%