உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பி.சி.பி.எல்., கெமிக்கல் நிறுவனம் தமிழகத்தில் விரிவாக்கம்

பி.சி.பி.எல்., கெமிக்கல் நிறுவனம் தமிழகத்தில் விரிவாக்கம்

பி.சி.பி.எல்., கெமிக்கல் நிறுவனம், வரும் 2030க்குள் அதன் வருவாயை 16,000 கோடி ரூபாயாக இருமடங்காக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.நாட்டின் மிகப்பெரிய கார்பன் உற்பத்தியாளரான இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன் உற்பத்தி திறனை ஐந்து மடங்கு அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளது. மேலும் ஆந்திராவில் புதிய ஆலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆர்.பி. சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் ஒரு அங்கமான இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில் 8,400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை