ரூ.3,700 கோடி திரட்ட வரும் சிபி இன்பினிட்
இந்தியாவில் மிகப்பெரிய தரவு மையங்களை இயக்கி வரும் 'சிபி' குழுமத்தின் அங்கமான, 'சிபி இன்பினிட் ஸ்பேசஸ்', 3,700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. பங்குதாரர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 1,200 கோடி ரூபாயும்; புதிய பங்கு விற்பனை வாயிலாக 2,500 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இதனை, சென்னை, நவி மும்பை தரவு மையங்கள் விரிவாக்கத்துக்கும், கடனை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளது.