உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.எப்.சி.ஐ., துணை நிறுவனங்கள் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

ஐ.எப்.சி.ஐ., துணை நிறுவனங்கள் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி:வங்கிசாரா நிதி நிறுவனமாக 1948ல் துவங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனமான ஐ.எப்.சி.ஐ.,யின் துணை நிறுவனங்களை இணைக்கும் முடிவுக்கு, மத்திய நிதி அமைச்சகம் முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.மத்திய தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் நிறுவனமான ஐ.எப்.சி.ஐ., குழுமம், கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் 88 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.முன்னதாக, ஏப்ரலில் ஐ.எப்.சி.எல்., நிறுவனத்தில் 500 கோடி ரூபாயை மத்திய அரசு மூலதனமாக செலுத்தியது. அதன் பிறகு, ஜூனில் நஷ்டத்தை சந்தித்தாலும், செப்டம்பரில் முடிந்த காலாண்டில் 185 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இந்நிலையில், ஐ.எப்.சி.ஐ., ஸ்டாக் ேஹால்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஐ.எப்.சி.ஐ., பேக்டர்ஸ் இந்தியா, ஐ.எப்.சி.ஐ., இன்ப்ரா டெவலப்மென்ட், ஐ.ஐ.டி.எல்., ரியல்டர்ஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்களை இணைக்க, மத்திய நிதி சேவைகள் துறை முதல்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. இதை பங்குச் சந்தைகளுக்கு ஐ.எப்.சி.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை