உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தயாரிப்பு துறையின் பிரச்னைகள் மத்திய அரசு குழு ஆய்வு செய்யும்

தயாரிப்பு துறையின் பிரச்னைகள் மத்திய அரசு குழு ஆய்வு செய்யும்

புதுடில்லி:தயாரிப்பு துறை எதிர்கொள்ளும் பிரச்னைகளான ஏற்றுமதி அனுமதி, வரி ஆகியவற்றை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இதுகுறித்து டில்லியில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிக்கு இடையே, தயாரிப்பு துறை சந்திக்கும் ஏற்றுமதி தடைகளை விரைவாக களைந்து அனுமதி வழங்கவும், வரி விவகாரங்களை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம், தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை, மத்திய வர்த்தக துறை, அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனரகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். தொழில் துறை அமைப்புகள், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு, ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஆலோசனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு அழைப்பாளராக, இந்த குழுவின் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவர். ஏற்றுமதி தொடர்பாக இப்போதுள்ள வரி அமைப்புகள், ஏற்றுமதி அனுமதி நடைமுறைகள் ஆகியவற்றை இந்த குழு ஆய்வு செய்து, தயாரிப்பு துறையின் போட்டித்தன்மை, ஏற்றுமதி செயல்பாடு ஆகியவற்றில் ஏற்படும் தாக்கங்களுக்கு ஏற்ப ஆலோசனைகளை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை