உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கடன் பத்திரங்களால் நிறுவனங்கள் ரூ.10.67 லட்சம் கோடி திரட்டின

கடன் பத்திரங்களால் நிறுவனங்கள் ரூ.10.67 லட்சம் கோடி திரட்டின

புதுடில்லி : நடப்பாண்டில் கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக, 10.67 லட்சம் கோடி ரூபாயை, இந்திய நிறுவனங்கள் திரட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், கடன் பத்திரங்கள் விற்பனை 9 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த டிச.,27ம் தேதி நிலவரப்படி, நீண்ட கால பத்திரங்கள் விற்பனை 19 சதவீதம் அதிகரித்த போதிலும், குறுகிய கால கடன் பத்திரங்கள் விற்பனை சற்று குறைந்து உள்ளது. அடுத்தாண்டு ஆர்.பி.ஐ., யின் வட்டி குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு, உலகளாவிய சந்தை குறியீட்டில் இடம் பெற்றிருப்பது மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் தேவை அதிகரிப்பால், கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டும் போக்கு தொடரும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை