உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மூன்றாவது வாரமாக தொடர்ந்த சரிவு

மூன்றாவது வாரமாக தொடர்ந்த சரிவு

•வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. கடந்த இரண்டு நாட்கள் நிப்டி, சென்செக்ஸ் கண்ட உயர்வுக்கு தடை ஏற்பட்டது. வாராந்திர அடிப்படையில், தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன•உலகளாவிய சந்தை போக்குகளால் இந்திய சந்தைகளில் நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, கணிசமான உயர்வு காணப்பட்டது. 17 ஆண்டுகளில் காணாத அளவுக்கு ஜப்பான் மத்திய வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி, 0.50 சதவீதமாக நேற்று அறிவித்தது. தொடர்ந்து, மூன்றாம் காலாண்டு முடிவுகளின் தாக்கத்தால், முன்னணி இந்திய நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று லாபத்தை பதிவு செய்ததால், சந்தையில் நீடித்த ஊசலாட்டம், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவுப் பாதைக்கு திரும்பியது •நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், பத்து துறை பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ஊடகத்துறை குறியீடு 2.60 சதவீதமும்; ரியல் எஸ்டேட் , மருந்து, எண்ணெய், எரிவாயு துறை குறியீடு 2 சதவீதத்துக்கு மேல் இறக்கம் கண்டன. மாறாக, நுகர்பொருட்கள் குறியீடு 0.52 சதவிகிதம் ஏற்றம் கண்டது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள், 2,758 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.27 சதவீதம் உயர்ந்து, 78.50 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 86.22 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஹிந்துஸ்தான் யுனிலீவர் பிரிட்டானியா ஐச்சர் மோட்டார்ஸ் கிராசிம் ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்அதிக இறக்கம் கண்டவை டாக்டர்.ரெட்டீஸ் டிரென்ட் மஹிந்திரா & மஹிந்திரா அதானி என்டர்பிரைசஸ் பி.பி.சி.எல்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை