உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தீபாவளி பங்கு பரிந்துரைகள்

தீபாவளி பங்கு பரிந்துரைகள்

பங்கு சார்ந்த ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்து வெளியிடும் நிர்மல் பேங் ரிசர்ச் நிறுவனம், தீபாவளிக்காக சில பங்குகளை பரிந்துரைத்துள்ளது.

பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சாதக அம்சங்கள்: பி.வி.சி., ரெசின் விலை நிலையாக இருப்பது, விரிவாக்கம் மற்றும் தயாரிப்புகளில் மேற்கொள்ளும் மாறுதல்கள், அதிக லாபம் தரும் பொருட்கள் தயாரிப்பில் கால்பதித்தல் பரிந்துரைக்கும் விலை: ரூ.191 இலக்கு: ரூ.278

கிளாக்ஸோ ஸ்மித்க்லைன்

சாதக அம்சங்கள்: இந்தியாவில் புற்றுநோய் மருந்துகள் பிரிவில் மீண்டும் கால்பதிப்பது, அதிக லாபம் உள்ள பெரியவர்களுக்கான தடுப்பு மருந்துகள் குறித்த விழிப்புணர்வு, சுவாசப் பிரச்னைகளுக்கான சிறப்பு மருந்துகள் உற்பத்தி பரிந்துரைக்கும் விலை: ரூ.2,760 இலக்கு: ரூ.3,425

ஜி.என்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்

சாதக அம்சங்கள்: வேகமாக வளர்ந்து வரும் மறுசீரமைக்கப்பட்ட மின்னணு உபகரணங்கள் துறையில் 'எலக்ட்ரானிக்ஸ் பஜார்' என்ற பிராண்டில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது. பரிந்துரைக்கும் விலை: ரூ.318 இலக்கு: ரூ.482

ஐ.சி. ஐ.சி.ஐ., பேங்க்

சாதக அம்சங்கள்: உயர்தர சொத்துக்கள், அதிகரிக்கும் கடன் வழங்குதல், நிலையாக மாறிக்கொண்டிருக்கும் வட்டி விகிதத்தில் கிடைக்கும் நிகர வித்தியாசம், செலவின கட்டுப்பாடு பரிந்துரைக்கும் விலை: ரூ.1,384 இலக்கு: ரூ.1,631

ஸ்டவ் கிராப்ட்

சாதக அம்சங்கள்: பிஜியான், கில்மா மற்றும் பிளாக் & டெக்கர் போன்ற முன்னணி பிராண்டுகள், நிறைவு பெற்றுவரும் விரிவாக்க திட்டங்கள், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, குறைந்த முதலீட்டில் சில்லரை வர்த்தக விரிவாக்கம் பரிந்துரைக்கும் விலை: ரூ.669 இலக்கு: ரூ.870

டாடா கன்சல்டன்சி

சாதக அம்சங்கள்: ஏ.ஐ., சேவை துறைக்காக மேற்கொள்ளும் மாற்றங்கள், முதலீடுகள், இரண்டாவது காலாண்டில் பெற்ற 10 பில்லியன் டாலர் அளவிலான ஆர்டர்கள், டேட்டா சென்டர் தொழில் பிரிவில் கால்பதித்தல் பரிந்துரைக்கும் விலை: ரூ.2,960 இலக்கு: ரூ.3,611

வருண் பிவரேஜஸ்

சாதக அம்சங்கள்: பல மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி விரிவாக்கங்கள், சர்வதேச அளவிலான வேகமான வளர்ச்சி (குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியா), கடனில்லாத நிலைமை மற்றும் லாப சதவீதம் குறையாமல் இருப்பது பரிந்துரைக்கும் விலை: ரூ.441 இலக்கு: ரூ.541

டிப்யூஷன் இன்ஜினீயர்ஸ்

சாதக அம்சங்கள்: திறனை அதிகரிப்பதன் வாயிலாக வளர்ச்சியடைவது; அதிக லாப சதவிகிதம் மற்றும் மதிப்பு கூடுதலான பிரிவில் கால்பதிப்பது ஆகியவை பரிந்துரைக்கும் விலை: ரூ.383 இலக்கு: ரூ.466


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி