உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 4வது வாரமாக சரிவு

அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 4வது வாரமாக சரிவு

புதுடில்லி:இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து நான்காவது வாரமாக, கடந்த அக்டோபர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் சரிந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வருவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மூன்று வாரங்களுக்கும் மேலாக 84 ரூபாயை தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதையடுத்து ரூபாயின் மதிப்பை மீட்க, ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள டாலர்களை விற்பதால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த அக்டோபர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 28,619 கோடி ரூபாய் குறைந்து, கிட்டத்தட்ட 57.58 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் கையிருப்பு 17,341 கோடி ரூபாய் குறைந்து, 57.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த செப்டம்பர் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரம் வரை, தொடர்ந்து ஏழு வாரங்களாக அதிகரித்து வந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, அதன் பிறகு தொடர்ந்து நான்கு வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 59.00 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி