உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு

 அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு

மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மார்ச் 20 உடன் முடிவடைந்த வாரத்தில் 11.41 பில்லியன் டாலர் குறைந்து, 698.346 பில்லியன் டாலராக, அதாவது 66 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. தங்க கையிருப்பு குறைந்ததே இதற்கு காரணம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு, 66,845 கோடி ரூபாய் குறைந்து, 67 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பிப்., 27 உடன் முடிவடைந்த வாரத்தில், அதாவது மேற்காசிய போர் பதற்றம் துவங்குவதற்கு முன், இதுவரை இல்லாத அளவாக நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, 68.50 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை அடைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை