உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.1.14 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.1.14 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

மும்பை:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த அக்டோபர் மாதத்தில், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து மொத்தம் 1.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர். அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து 24வது வர்த்தக நாளாக, நேற்று முன்தினமும் 5,813 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுஉள்ளனர்.

வெளியேற்றம்

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து 28வது வர்த்தக நாளாக 3,515 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர். கடைசி ஐந்து வர்த்தக நாட்களை பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள் 17,240 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும்; உள்நாட்டு முதலீட்டாளர்கள் 14,323 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும் இருந்தனர். ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள் 1.14 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இந்த காலத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1.07 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

நிதி சேவைகள்

அக்டோபர் 30ம் தேதி நிலவரப்படி, நடப்பாண்டில் இந்திய பங்குகளில் அன்னிய முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 6,593 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள், வணிக, தொழில்முறை சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் சேவைகளில் அதிகம் முதலீடு செய்து உள்ளனர். நிதி சேவைகள், எரிசக்தி ஆகிய துறைகளிலிருந்து அதிக மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெற்றுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை