உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்

ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்

மத்திய புள்ளியியல் அமைச்சகம், ஜி.டி.பி., வளர்ச்சி குறித்த தரவுகளை வெளியிடுவதற்கான நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இதுவரை மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டு வந்த தரவுகள், இனி மாலை 4 மணிக்கே வெளியிடப்படும். ஜி.டி.பி., தரவுகள் வெளியிடப்பட்ட அன்றே அதனை ஆராய ஊடகங்கள், பொதுமக்களுக்கு கூடுதல் நேரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான ஜி.டி.பி., தரவுகள், வரும் நவம்பர் 29ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை