தங்கம் 1%; வெள்ளி 2% எம்.சி.எக்ஸ்., சந்தையில் ஏற்றம்
கமாடிட்டி சந்தையில், கடந்த மாத சரிவிலிருந்து மீண்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து உள்ளன. எம்.சி.எக்ஸ்., சந்தையில் 10 கிராம் தங்கம் (டிசம்பர் பியூச்சர்) ஒரு சதவீதம் வரை அதிகரித்து 1.44 லட்சம் ரூபாய்க்கும், வெள்ளி (டிசம்பர் பியூச்சர்) இரண்டு சதவீதம் வரை உயர்ந்து கிலோவுக்கு 1.88 லட்சம் ரூபாய்க்கும் வர்த்தகமாகின. சர்வதேச சந்தையான காமெக்ஸில், ஒரு அவுன்ஸ் (31.100 கிராம்) தங்கம் 1.25 சதவீதம் அதிகரித்து, 4,121 டாலருக்கும்; ஒரு அவுன்ஸ் வெள்ளி 1.83 சதவீதம் உயர்ந்து, 52.89 டாலருக்கும் வர்த்தகமானது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தற்காலிக உயர்வு இருந்தாலும், சர்வதேச வட்டி விகித மாற்றங்கள் மற்றும் பணவீக்க தரவுகள் வெளியாகும் வரை, விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும். எனவே, முதலீட்டாளர்கள் ஒரே கட்டமாக முதலீடு செய்யாமல், தவணை முறையில் வாங்குவது உகந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணங்கள்
1 அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான விலை சரிவுக்கு பிறகு, முதலீட்டாளர்கள், குறைந்த விலையில் தங்கத்தை வாங்க தொடங்கி இருப்பது 2 கச்சா எண்ணெய் விலை சரிவால், பணவீக்க கவலையை குறைத்து, தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பது 3 இந்தியாவில் நிலவிவரும் பண்டிகை கால மற்றும் திருமண கால தேவை உள்நாட்டு சந்தைக்கு வலுவான ஆதரவை தந்திருப்பது 4 கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் வரவு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு 93.87 என்ற அளவில் வலுவாக இருப்பது.