உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தரைவிரிப்பு ஏற்றுமதி பாதிப்பு அரசு உதவ வலியுறுத்தல்

தரைவிரிப்பு ஏற்றுமதி பாதிப்பு அரசு உதவ வலியுறுத்தல்

பதோஹி:இந்திய பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று, தரைவிரிப்பு தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அகில இந்திய தரைவிரிப்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தரைவிரிப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாகிகள், மத்திய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினர். அமெரிக்க வரி விதிப்பால், தரைவிரிப்புகள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவி அறிவிக்க வேண்டும். குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் உள்ள பதோஹி பகுதியில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை