இருசக்கர வாகன விற்பனை: முதல் இடத்தை மீட்ட ஹீரோ
சென்னை:செப்டம்பர் மாத இருசக்கர வாகன விற்பனை, 17.12 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 15.88 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த செப்டம்பரில், 18.60 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த சில மாதங்களாக முன்னிலையில் இருந்த 'ஹோண்டா' நிறுவனத்தை விஞ்சி, ஹீரோ முதல் இடத்தை மீட்டுள்ளது. அதிகபட்சமாக, பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 28.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நிறுவனங்கள் செப்., 2023 செப்., 2024 வளர்ச்சி
ஹீரோ 5,19,789 6,16,706 25.39ஹோண்டா 4,91,802 5,36,391 9.06டி.வி.எஸ்., 3,00,493 3,69,138 22.84பஜாஜ் 2,02,510 2,59,333 28.05என்பீல்டு 74,261 79,326 6.82மொத்தம் 15,88,855 18,60,894 17.12