உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தரமானதா என கண்டறிய தோல் பொருட்களுக்கு லெதர் மார்க்

தரமானதா என கண்டறிய தோல் பொருட்களுக்கு லெதர் மார்க்

சென்னை,:ஆடு, மாடு தோல்களை பதப்படுத்தி, காலணி, ஷூ, கைப்பை, பர்ஸ், பெல்ட் உள்ளிட்ட பொருட்கள் செய்யப்படுகின்றன. சென்னை கிண்டியில், மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இதன் மண்டல ஆய்வகங்கள், பஞ்சாபின் ஜலந்தர், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ளன.தற்போது, தோல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், 'லெதர் மார்க்' சான்றை, சி.எல்.ஆர்.ஐ., அறிமுகம் செய்துள்ளது. இதற்கு, நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் மாதிரியை, சி.எல்.ஆர்.ஐ., வசம் வழங்க வேண்டும். அவற்றை ஆய்வு செய்து, சி.எல்.ஆர்.ஐ., 'லெதர் மார்க்' சான்று வழங்கும். இதுகுறித்து, சி.எல்.ஆர்.ஐ., இயக்குனர் ஸ்ரீராம் கூறியதாவது:'கெமிக்கல் டெஸ்ட், மைக்ரோஸ்கோபிக் டெஸ்ட்' போன்ற சோதனைகள் வாயிலாக, பொருட்கள் தோலில் செய்யப்பட்டவை தானா என்பது உறுதி செய்யப்படும். பொருளில் தோலின் அளவு எவ்வளவு உள்ளது என்றும் பரிசோதிக்கப்படும்.தரமாக இருக்கும்பட்சத்தில், லெதர் மார்க் சான்று வழங்கப்படும். அதை நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் வெளியிடலாம். சான்றுடன் இருக்கும், 'கியு.ஆர்., கோடு' ஸ்கேன் செய்து பார்த்தால், தோல் வகை, நிறம், மூலப்பொருள் உள்ளிட்டவற்றை அறியலாம். தங்கத்திற்கு, 'ஹால் மார்க்' மற்றும் பட்டுக்கு, 'சில்க் மார்க்' போன்று, 'லெதர் மார்க்' தோல் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த உதவும்.இவ்வாறு அவர் கூறினார். சி.எல்.ஆர்.ஐ., ஆய்வகங்களில் தோலை பதனிடும் தொழில்நுட்பம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஆய்வு தோலை கிழியாமல் எடுப்பது, சர்வதேச தரத்தில் தோல் பொருட்களை தயாரிப்பது தொடர்பாக, வியாபாரிகள், தொழில் துறையினருக்கு பயிற்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை