உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்தது

எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்தது

புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு 'எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா' நிறுவனம், 'செபி'யிடம் விண்ணப்பித்து உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா. இந்நிறுவனத் தின் 10.18 கோடி பங்குகள், அதன் தாய் நிறுவனமான தென்கொரியாவைச் சேர்ந்த 'எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்' வசமுள்ளன. இப்பங்குகளை தற்போது புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிறகு, எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தில், தென்கொரிய நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் குறைந்து, 57.69 கோடி பங்குகளாக இருக்கும்.ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகை குறித்து, இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 15,000 கோடி ரூபாயை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. 'ஹூண்டாய்' நிறுவனத்துக்குப் பின், ஐ.பி.ஓ., வரும் இரண்டாவது கொரிய நிறுவனமாகும் எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ