நாக்பூர் வளர்ச்சி திட்டத்துக்கு மஹா., அரசு இரண்டு ஒப்பந்தம்
மஹாராஷ்டிரா அரசின் 'புதிய நாக்பூர்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுத்துறையைச் சேர்ந்த என்.பி.சி.சி., இந்தியா மற்றும் ஹட்கோ நிறுவனங்களுடன், நாக்பூர் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.நாக்பூரை உலகத்தரம் வாய்ந்த வணிக மற்றும் நிதி மையமாக மாற்ற, இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, என்.பி.சி.சி., 1,700 ஏக்கர் நிலத்தை தொழில் துவங்க ஏதுவாக வடிவமைக்கும்; ஹட்கோ, நில கையகப்படுத்தல், உள்கட்டமைப்பு பணிகளுக்கு 11,300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும்.