உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / 50 சதவிகித ஸ்கோடா பங்குகளை வாங்கும் மஹிந்திரா

50 சதவிகித ஸ்கோடா பங்குகளை வாங்கும் மஹிந்திரா

மும்பை:'மஹிந்திரா அண்டு மஹிந்திரா' நிறுவனம், 'ஸ்கோடா ஆட்டோ' இந்தியாவின் 50 சதவீத பங்குகளை வாங்குவது தொடர்பான இருதரப்பு பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில், இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.ஜெர்மனியைச் சேர்ந்த 'ஸ்கோடா ஆட்டோ' நிறுவனம், இந்தியாவில் 'போக்ஸ்வேகன்' கார் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. சில ஆண்டுகளாக உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால், விற்பனையில் சரிவை சந்தித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளின் மதிப்பு, கிட்டத்தட்ட 8,400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ