உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஊசலாட்டத்தால் திணறிய சந்தை

ஊசலாட்டத்தால் திணறிய சந்தை

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி லேசான இறக்கத்துடனும்; சென்செக்ஸ் சிறிய ஏற்றத்துடனும் நிறைவடைந்தன • நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. பிற்பகல் வரை ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், அதன்பின் சந்தை குறியீடுகள் சரிவை கண்டன. நேற்றைய தினம், சந்தைக்கு உற்சாகம் தரும் செய்திகள் இல்லாததால், முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் சந்தை அதிக ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. வர்த்தக நேர முடிவில், பெரிய மாற்றம் ஏதுமின்றி முடிவடைந்தது• நிப்டி குறியீட்டில், ரியல் எஸ்டேட் மற்றும் ஐ.டி., பொதுத்துறை வங்கிகள், உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களில் குறியீடுகள் உயர்வு கண்டன. ஊடகம், எனர்ஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள், இறக்கத்தை சந்தித்தன • மும்பை பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் 2,025 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,937 நிறுவன பங்குகள் குறைந்தும்; 131 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின• வரவிருக்கும் இந்திய, அமெரிக்க பணவீக்கம் குறித்த தரவுகள், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அதனை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,286 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.17 சதவீதம் குறைந்து, 72.02 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 84.85 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஸ்ரீராம் பைனான்ஸ் பஜாஜ் பின்சர்வ் எச்.சி.எல்.,டெக் விப்ரோ இன்போசிஸ்அதிக இறக்கம் கண்டவை பார்தி ஏர்டெல் டாக்டர் ரெட்டீஸ் அதானி போர்ட்ஸ் அதானி என்டர்பிரைசஸ் எச்.டி.எப்.சி.,லைப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை