மேலும் செய்திகள்
முன்னெச்சரிக்கை தந்த 3ம் காலாண்டு முடிவுகள்
10-Jan-2025
• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. கடந்த மூன்று நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வு தடைபட்டது. வாராந்திர அடிப்படையில், தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன• தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் எதிரொலியாக, இந்திய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து, முன்னணி நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறின. முதலீட்டாளர்கள் ஐ.டி., வங்கித்துறை பங்குகளை அதிகளவில் விற்றதால், சந்தை சரிவை கண்டது • வர்த்தகத்தின் இடையே நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் வரை சரிவை கண்டன. முடிவில், சந்தை குறியீடுகள் கணிசமான இறக்கத்துடன் நிறைவு செய்தன • நிப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள 12 துறைகளில், ஏழு துறைகள் சார்ந்த பங்குகள் உயர்வு கண்டன. அதிகபட்சமாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீடு, 1.56 சதவீதம் உயர்வு கண்டது. மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை குறியீடு, 2.68 சதவீதம் இறக்கம் கண்டதுஅன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 3,318 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.17 சதவீதம் உயர்ந்து, 81.43 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 86.60 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் / இறக்கம் கண்டவை பி.பி.சி.எல்., ரிலையன்ஸ் கோல் இந்தியா ஹிண்டல்கோ நெஸ்லேஅதிக இறக்கம் கண்டவை இன்போசிஸ் ஆக்ஸிஸ் பேங்க் ஸ்ரீராம் பைனான்ஸ் கோடக் பேங்க் விப்ரோ
10-Jan-2025