உள்ளூர் செய்திகள்

NANO BITS

பி.என்.பி., ஹவுசிங் சி.இ.ஓ., கிரிஷ் பதவி விலகல் பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் வழங்கும் துணை நிறுவனம் பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ். இதன் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான கிரிஷ் கவுஸ்கி ராஜினாமா செய்துள்ளார். எனினும், வரும் அக்டோபர் மாதம் 28 ம் தேதிதான் அவர் பதவி விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜோதி குளோபல் பங்கு விலை நிர்ணயம் பிளாஸ்டிக் மற்றும் எப்.ஆர்.பி., மோல்டிங் நிறுவனமான, ஜோதி குளோபல் பிளாஸ்ட், புதிய பங்கு வெளியீடு வரும் 4ம் தேதி துவங்குகிறது. 35.44 கோடி ரூபாய் நிதி திரட்ட வெளியிடப்படும் ஐ.பி.ஓ.,வில் ஒரு பங்கின் விலை 62 முதல் 66 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., வரும் எக்ஸெல்சாப்ட் டெக்., மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனமான எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ், 700 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக புதிய பங்குகளை வெளியிட விண்ணப்பித்திருந்தது. அதை ஏற்று செபி ஒப்புதல் அளித்துள்ளது. அனில் அம்பானிக்கு ஈ.டி., சம்மன் வங்கிகளிடம் 17,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகார் தொடர்பாக, வரும் ஆக., 5ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஜூலை 24ல் மும்பை, டில்லி உள்பட 35 இடங்களில், அனிலின் ரிலையன்ஸ் குழும 50 நிறுவனங்கள், 25 தனிநபர்களிடம் ஈ.டி., சோதனை நடத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை