உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / செப்டம்பரில் 44 லட்சத்தை எட்டிய டிமேட் புதிய கணக்குகள்

செப்டம்பரில் 44 லட்சத்தை எட்டிய டிமேட் புதிய கணக்குகள்

புதுடில்லி:'டிமேட்' புதிய கணக்குகளின் எண் ணிக்கை, கடந்த செப்டம் பரில் 44 லட்சம் அதிகரித்து, மொத்த எண்ணிக்கை 17.50 கோடியை எட்டியுள்ளது. புதிய டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, தொடர்ந்து நான்காவது மாதமாக, செப்டம்பரிலும் 40 லட்சத்தை தாண்டிஉள்ளது.பங்குகள் மற்றும் பிற பத்திரங்களை மின்னணு முறையில் வைத்திருக்க பயன்படுத்தப்படும் டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்ட டிமேட் கணக்கு திறப்பு எண்ணிக்கை, கடந்த செப்டம்பர் மாதத்தில் 44 லட்சமாக அதிகரித்து, மொத்த எண்ணிக்கை 17.50 கோடியை எட்டியுள்ளது.நடப்பு ஆண்டின் துவக்கத்தில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 40 லட்சம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பரில் 12 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 11,058 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இந்த புதிய பங்கு வெளியீட்டின் சாதனை அளவின் வாயிலாக டிமேட் கணக்கு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும், இந்த ஆண்டில் 62க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 64,511 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்கும் விதமாக, முதலீட்டாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கணிசமான அளவில் டிமேட் கணக்குகளை துவக்குகின்றனர்.டிமேட் கணக்கு எண்ணிக்கை அதிகரிப்பின் நிலையான வேகம், சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான அறிகுறியாக சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர். புதிய முதலீட்டாளர்களின் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு, வெளிநாட்டு நிதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களின் வெளியேற்றங்களை ஈடு செய்ய உதவும். மேலும், சந்தையின் ஏற்ற, இறக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவும் எனவும் மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.செபியின் அறிக்கையின்படி, உள்நாட்டு குடும்பங்களின் பங்கு முதலீடுகள், கடந்த 2023ம் நிதியாண்டில் 84 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024ம் நிதியாண்டில் 128 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மாதம் புதிய கணக்கு எண்ணிக்கை (லட்சத்தில்)

செப்டம்பர் 2023 30.70 அக்டோபர் 26.80நவம்பர் 27.80 டிசம்பர் 40.90 ஜனவரி 2024 46.80 பிப்ரவரி 43.50 மார்ச் 31.20 ஏப்ரல் 30.70 மே 36.00 ஜூன் 42.40 ஜூலை 45.50 ஆகஸ்ட் 42.30 செப்டம்பர் 43.60 ஆதாரம்: சி.டி.எஸ்.எல்., மற்றும் என்.எஸ்.டி.எல்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை