உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  நிப்டி 23,925க்கு கீழே உள்ள வரை இறக்கத்துக்கு வாய்ப்பு

 நிப்டி 23,925க்கு கீழே உள்ள வரை இறக்கத்துக்கு வாய்ப்பு

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) டாடா ஸ்டீல் 185.61 --3.18 கோல் இந்தியா 418.85 3.50 எட்டர்னல் 320.80 -1.95 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 710.50 -1.60 விப்ரோ 172.80 -3.60 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 22.42 -0.08 சுஸ்லான் எனர்ஜி 45.55 0.20 ஸ்விக்கி 276.45 0.35 என்.எம்.டி.சி., 83.85 -0.85 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 86.44 -0.27 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) ஐநாக்ஸ் விண்டு 75.60 1.20 மணப்புரம் பைனான்ஸ் 325.60 -14.10 ஏஞ்சல் ஒன் 303.80 4.00 சிட்டி யூனியன் பேங்க் 237.60 1.59 பிரமல் பார்மா 219.50 5.28 மற்ற சில பங்குகளின் விலை விபரம் எல்.டி., புட்ஸ் 449.55 4.75 கிரான்யூல்ஸ் இந்தியா 867.00 18.70 நிப்பன் லைப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் 1195.00 35.10 என்.டி.பி.சி., 332.00 -0.50 ரெடிங்டன் 378.10 6.80 குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 23,883.15 23,890.00 23,737.90 23,779.15 நேற்று 14 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி அதிக பட்சமாக 159 புள்ளிகள் வரை சரிந்தது. பின்னர் சற்று மீண்டு நாளின் இறுதியில் 118 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17-ல் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.42 சதவீத உயர்வுடனும், 'நிப்டி200' குறியீடு அதிக பட்சமாக 0.48 சதவீதம் சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி500 ஹெல்த்கேர'் குறியீடு அதிக பட்சமாக 0.78 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 2.86 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,698 நிறுவனங்களின் பங்குகளில் 1,507 அதிகரித்தும், 2,083 குறைந்தும்; 108 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிந்தன.. மறுபடியும் நிப்டி அனைத்து முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.ஓ.சி., பியரிஷ் மொமென்டம் தொடர்வதையே காட்டுகிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் 19.41 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ., 34.21 என்ற அளவிலும் இருக்கிறது. இது டெக்னிக்கலாக சிறியதொரு ஏற்றம் வந்துபோக வாய்ப்புள்ளது என்பதை உணர்த்துகிறது. நிப்டிக்கு 23,738 உடனடி சப்போர்ட்டாகவும், 23,925 உடனடி ரெசிஸ்டென்ஸாகவும் இருக்கிறது. 23,738-க்கு கீழே சென்றால் 23,600 வரையிலும் மற்றும் 23,925-க்கு மேலே சென்றால் 24,050-24,175 வரையிலும் நிப்டி செல்ல வாய்ப்புள்ளது. சிறிய டெக்னிக்கல் பவுன்ஸ்பேக்கிற்கு வாய்ப்பு இருக்கின்ற போதிலுமே நிப்டி 23,925-க்கு கீழே இருக்கும் வரை இறக்கத்திற்கு சாதகமான சூழலே நிலவுகிறது எனலாம். ஆதரவு 23,700 23,645 23,585 தடுப்பு 23,855 23,950 24,005


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்