இந்தியாவுக்கு இடம் மாறும் நோக்கியா போன் உற்பத்தி
புதுடில்லி:'நோக்கியா' மொபைல் போன் தயாரிப்பாளரான எச்.எம்.டி., நிறுவனம், தன் உலகளாவிய விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக, அதன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பகுதியை, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து, நோக்கியா பிராண்டு போன்கள் தயாரிப்பு நிறுவனமான எச்.எம்.டி., நிறுவனமும், இந்தியாவை அதன் மைய உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் கணிசமான பகுதியை, சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக, இந்நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் மண்டலத்துக்கான தலைமை செயல் அதிகாரி ரவி குன்வர் தெரிவித்துள்ளார்.