என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ., வருவதற்கு அனுமதி
புதுடில்லி:பங்குச் சந்தையில், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 10,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட, 'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' நிறுவனத்துக்கு 'செபி' ஒப்புதல் அளித்து உள்ளது.என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வருவதற்காக செபியிடம் கடந்த செப்டம்பரில் விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.பங்கு வெளியீட்டின் போது, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட புதிய பங்குகளை வெளியிட உள்ளது. புதிய பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் 7,500 கோடி ரூபாய், என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் கடன், நிலுவைத்தொகையை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் தேவைக்கும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.