மேலும் செய்திகள்
தனியார் துறை மூலதன செலவினம் கடும் சரிவு
25-Mar-2025
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,260 கோடி ரூபாய் நிதியை திரட்ட அனுமதி கேட்டு, பார்க் மெடி வேர்ல்டு குழுமம், செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக கொண்ட பார்க் மெடி வேர்ல்டு குழுமம், டில்லி, அம்பாலா, பானிபட், ஜெய்ப்பூர் உட்பட 13 இடங்களில், பார்க் மருத்துவமனை என்ற பெயரில், மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. 3,000 படுக்கை வசதிகள் கொண்டுள்ளது.இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் அஜித் குப்தா வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக, 300 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 900 கோடி ரூபாயும் திரட்ட உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும், ஐ.பி.ஓ.,வுக்கு முன்னரே, தனிப்பட்ட பங்குகள் விற்பனை வாயிலாக 192 கோடி ரூபாயை திரட்டவும் திட்டமிட்டு உள்ளது.புதிய பங்குகள் விற்பனை வாயிலாக திரட்டப்படும் தொகையில், 410 கோடி ரூபாய் கடன்களை திருப்பி செலுத்தவும், 110 கோடி ரூபாயை மூலதன செலவினங்களுக்கும் பயன்படுத்த உள்ளது. மேலும், 77 கோடி ரூபாயை மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் பிற செலவுகளுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
25-Mar-2025