உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முன்னெச்சரிக்கையால் சரிவு

முன்னெச்சரிக்கையால் சரிவு

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன • உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, வர்த்தகத்தின் ஆரம்பத்தில் குறியீடுகள் சரிவுடன் துவங்கின. பிற்பகல் வரை ஊசலாட்டம் நீடித்தது. இதனால், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட முதலீட்டாளர்கள், பங்குகளை விற்க துவங்கியதால், சந்தை குறியீடுகள் சரிவு பாதைக்கு திரும்பின • நிப்டி குறியீட்டில், அதிகபட்சமாக வங்கித்துறை சார்ந்த பங்குகள் சரிவு கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில் 2,892 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 1,040 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 79 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின• அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் சற்று குறைந்திருப்பது ஆறுதலாக இருப்பினும், இரண்டாவது காலாண்டு முடிவுகள் கைகொடுக்காததால், சந்தையை முன்னெச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் அணுகுவதால், சந்தை எழுச்சி காண முடியாமல், திணறுவதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---4,614 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர். கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரலுக்கு 0.63 சதவீதம் சரிந்து, 71.57 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, 84.09 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை அதானி என்டர்பிரைசஸ் ஹீரோ மோட்டோகார்ப் டாடா கன்ஸ்யூமர் பிரிட்டானியா மாருதிஅதிக இறக்கம் கண்டவை சிப்லா ஸ்ரீராம் பைனான்ஸ் எச்.டி.எப்.சி.,லைப் டிரென்ட் இன்போசிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி