உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தொழில்நுட்ப மேம்பாட்டு மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை

தொழில்நுட்ப மேம்பாட்டு மானியம் மீண்டும் வழங்க கோரிக்கை

சென்னை:தொழிலில் நிலவும் போட்டி மற்றும் உற்பத்தி செலவை சமாளிக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, புதிய தொழில்நுட்ப மேம்பாடு நிதியுதவி திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு, மத்திய அரசுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொது செயலர் வாசுதேவன் கூறியதாவது:சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு, மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான மூலதன செலவில், 15 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய கடும் போட்டிக்கு ஏற்ப சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழிலில் தாக்குப்பிடிக்க உற்பத்திக்கான இயந்திரங்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, மானியம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், தேசிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வாரியத்தை அமைத்து, அதில் 'டான்ஸ்டியாவை' சேர்க்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை