உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கைத்தறி நுாலுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்டு தீர்மானம்

கைத்தறி நுாலுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்டு தீர்மானம்

சேலம்,:நுால் வியாபாரிகள் சங்க கூட்டத்தில், கைத்தறி நுாலுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்ட நுால் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம், அழகாபுரத்தில் நடந்தது. அதில் கைத்தறி நுால்களுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளித்தல்; வணிகர்கள் நல வாரியத்தில் அனைத்து வியாபாரிகளையும் உறுப்பினர்களாக இணைத்தல்; நலிந்த உறுப்பினர்களுக்கு உதவி தொகை வழங்குதல் உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ