உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சில்லரை விலை பணவீக்கம் 75 மாதங்களில் இல்லாத சரிவு

சில்லரை விலை பணவீக்கம் 75 மாதங்களில் இல்லாத சரிவு

புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 75 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த மே மாதம் 2.82 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, இதுவே மிகவும் குறைவான பணவீக்கம். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. தானியங்கள், சர்க்கரை, முட்டை உள்ளிட்டவற்றின் விலையும் குறைந்துள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் உணவுப் பிரிவு பணவீக்கம் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2021 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இதுவே மிகக் குறைவாகும். கடந்தாண்டு மே மாதத்தில் இது 8.69 சதவீதமாக இருந்தது. கடந்த மாதம் நகர்ப்புறங்களில் பணவீக்கம் 3.07 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 2.59 சதவீதமாகவும் இருந்தது. கடந்த வாரம் நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பணவீக்க கணிப்பு 4 சதவீதத்திலிருந்து 3.70 சதவீதமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாதங்கள் பணவீக்கம் (%)

2024மே 4.80ஜூன் 5.08ஜூலை 3.54ஆகஸ்ட் 3.65செப்டம்பர் 5.49அக்டோபர் 6.21நவம்பர் 5.48டிசம்பர் 5.222025ஜனவரி 4.26பிப்ரவரி 3.61மார்ச் 3.34ஏப்ரல் 3.16மே 2.82


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ