மேலும் செய்திகள்
ஏற்றம் தந்த அமெரிக்க தேர்தல் முடிவுகள்
07-Nov-2024
• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ந்து மூன்றாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் உயர்வு கண்டன• உலக சந்தை நிலவரங்களின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அதானி, ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி போன்ற பெரு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில், முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் புள்ளிகள் உயர்வு கண்டன• நிப்டி குறியீட்டில், நுகர்வோர் பொருட்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை தவிர்த்து, அனைத்து துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. பொதுத்துறை வங்கிகள், ஊடகம் சார்ந்த நிறுவனங்களின் குறியீடு, கிட்டத்தட்ட 2.5 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டது• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், 2,738 நிறுவன பங்குகள் அதிகரித்தும்; 1,227 நிறுவன பங்குகள் சரிந்தும்; 102 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- 3,665 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர். கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.13 சதவீதம் உயர்ந்து, 72.64 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 84.69 ரூபாய் என்ற அளவுக்கு இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை
அதானி போர்ட்ஸ் என்.டி.பி.சி., அதானி என்டர்பிரைசஸ் ஆக்ஸிஸ் பேங்க் எஸ்.பி.ஐ.,அதிக இறக்கம் கண்டவை
பார்தி ஏர்டெல் ஹீரோ மோட்டோகார்ப் ஐ.டி.சி., எச்.டி.எப்.சி., லைப் சன் பார்மா
07-Nov-2024