ரூ. 3,780 கோடி நிதி திரட்டிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
புதுடில்லி:கடந்த வாரம் மட்டும், 39 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மொத்தம் 3,780 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. இதில் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப், வளர்ச்சி நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இரண்டும் அடங்கும். அதேபோல, இதற்கு முந்தைய வாரமான அக்டோபர் 21 முதல் 26ம் தேதி வரையிலான காலத்தில், 21 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1,570 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. அதிகபட்சமாக மும்பையைச் சேர்ந்த ஒன்பது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டின. இதற்கு அடுத்தபடியாக பெங்களூரு, டில்லி தேசிய தலைநகர் பகுதி, புனே மற்றும் சென்னையைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதி திரட்டியுள்ளன.இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த எட்டு வாரங்களில், வாரம் ஒன்றுக்கு சராசரியாக 2,650 கோடி ரூபாய் நிதி திரட்டிஉள்ளன.