உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இந்திய பங்குச் சந்தையில் கவனிக்க வேண்டிய துறைகள்

இந்திய பங்குச் சந்தையில் கவனிக்க வேண்டிய துறைகள்

பொருளாதார உலகில் இந்தியாவின் எழுச்சி முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஒரு காலத்தில் வெளிநாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்திருந்த இந்தியா தற்போது சுயசார்புடன் மாற்றத்தையும், வளர்ச்சியையும் சந்தித்து வருகிறது.இந்த பிரதிபலிப்பை பங்குச் சந்தையிலும் காணலாம். கடந்த ஆண்டு பங்குச்சந்தை பொதுவாக ஏறுமுகமாக அமைந்து உச்சத்தையும் தொட்டது. ஏறுமுகம் தொடரும் என எதிர்பார்க்கப் பட்டாலும் அணுகுமுறையில் கவனம் தேவை என எச்சரிக்கும் வல்லுனர்கள், இந்த ஆண்டு பங்குச்சந்தையில் தாக்கம் செலுத்தக்கூடிய கருத்தாக தங்களை பரிந்துரைக்கின்றனர்.

பசுமை எரிபொருள்:

சர்வதேச போக்குகளாக அமையும் பசுமை எரிபொருள், நீடித்த வளர்ச்சி ஆகிய கருப்பொருட்கள் இந்திய சந்தையிலும் தாக்கம் செலுத்துகின்றன. இந்த ஆண்டும் இப்போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் முதலீடு நல்ல பலன் அளிக்கும் வாய்ப்பு உள்ளது.

டிஜிட்டல் மாற்றம்:

பல ஆண்டுகளாக இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போது உலகம் டிஜிட்டல் தீர்வுகளை அதிகம் நாடும் நிலையில் இந்திய ஐ.டி,. சேவை நிறுவனங்கள் வளர்ச்சியை எதிர்நோக்கும் சூழலில் உள்ளன. இத்துறையில் வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ- - காமர்ஸ்:

இந்தியர்கள் பொருட்களை வாங்குவதில் இ- - காமர்ஸ் நிறுவனங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆன்லைன் சில்லரை வர்த்தக வளர்ச்சி, இந்திய இ -- -காமர்ஸ் துறையை எழுச்சி பெற வைத்துள்ளது. மேலும் புதுமையாக்கம் சார்ந்த வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

மருந்தகம்:

இந்திய சுகாதாரம் மற்றும் மருந்தக துறை நல்ல முதலீடு வாய்ப்பாக அமைவதாக கருதப்படுகிறது. புதுமையாக்கம், ஆய்வு மற்றும் வெளிநாட்டு சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இத்துறைகளில் வளர்ச்சி தொடரும் என கணிக்கின்றனர். கடந்த கால தரவுகளும் இதற்கு வலு சேர்க்கின்றன.

உள்கட்டமைப்பு:

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு துறை அடிப்படையாக அமைந்துள்ளது. உள்கட்டமைப்பு துறை நிறுவனங்கள் நல்ல பலன் அளித்துள்ளன. இந்திய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மேலும் தீவிர வளர்ச்சி வாய்ப்புகளால் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை