மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
புதுடில்லி : பசுமை மின்சாரம் கொள்முதல் செய்வதை அதிகரிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, டில்லியில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: மின்சாரத்தின் விலை குறையும் என எதிர் பார்த்து, கொள்முதலை மாநில அரசுகள் தாமதப்படுத்தி வருகின்றன. பசுமை எரிசக்தி உற்பத்தி அதிகரித்திருப்பதால், அதன் விலை ஏற்கனவே குறைந்திருக்கிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான, பசுமை மின்சாரத்தை மாநில அரசுகள் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். மாநில மின்சார துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்ய முன்வராததால், 44 கிகாவாட் துாய்மையான, பசுமை மின்சாரம் விற்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.