உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்: மூன்றாவது நாளாக சரிவு

பங்கு சந்தை நிலவரம்: மூன்றாவது நாளாக சரிவு

மூன்றாவது நாளாகவும் சரிவு

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. அன்னிய முதலீடுகள் வரத்து நீடித்த போதிலும், உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நீடிக்கும் இழுபறி, டி.சி.எஸ்., உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது ஆகிய காரணங்களால், முதலீட்டாளர்கள் ஐ.டி., வாகனத்துறை மற்றும் எனர்ஜி துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். இதனால், நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் சரிவை கண்டன. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்

வியாழனன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி குறியீடுகள் சரிவுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.

சரிவுக்கு காரணங்கள்

* டிரம்பின் வரி விதிப்பால், உலக சந்தைகளில் நிலவிய பாதகமான சூழல்* எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் * ஐ.டி., வாகனத்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றதுஉயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)ஹிந்துஸ்தான் யூனிலீவர் 4.63எஸ்.பி.ஐ., லைப் 1.37சன் பார்மா 0.71 சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)டி.சி.எஸ்., 3.47மஹிந்திரா அண்டு மஹிந்திரா 2.92ஹீரோ மோட்டோகார்ப் 2.74

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் ___ கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று ___ இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.31 சதவீதம் அதிகரித்து, 68.85 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா சரிந்து, 85.80 ரூபாயாக இருந்தது.நிப்டி: 25,149.85மாற்றம்: 205.40 இறக்கம் சிவப்புசென்செக்ஸ்: 82,500.47மாற்றம்: 689.81 இறக்கம் சிவப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை