உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

மீண்டும் 80,000 புள்ளிகள்

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்றும் நிப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், கடந்த நான்கு மாதங்களில் முதன்முறையாக 80,000 புள்ளிகளை கடந்தது. தொடர்ச்சியாக, ஏழாவது வர்த்தக நாளாக, சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

உயர்வுக்கு காரணங்கள்

1. தொடர்ச்சியான அன்னிய முதலீடுகள் வரத்து2. உலகளாவிய சந்தைகளின் எழுச்சியின் தாக்கம்3. ஐ.டி., மற்றும் வாகனத்துறையில் முதலீட்டாளர்கள் ஆர்வம்4. சாதகமான நான்காவது காலாண்டு முடிவுகள்

உலக சந்தைகள்

அமெரிக்க மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்'வின் கவர்னர் ஜெரோம் பாவெலை நீக்கும் நோக்கமில்லை என்றும்; சீனாவுக்கு விதித்த பரஸ்பர வரியை குறைக்க யோசித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால், அந்நாட்டு சந்தைகள் உயர்ந்தன.

விலை அதிகரித்த பங்குகள்

 எச்.சி.எல்., டெக் : 8% டெக் மஹிந்திரா : 5% டாடா மோட்டார்ஸ் : 4% இன்போசிஸ் : 4% மஹிந்திரா அண்டு மஹிந்திரா : 3%

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 3,333 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.35 சதவீதம் அதிகரித்து, 68.35 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா குறைந்து, 85.45 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை