உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்குசந்தை நிலவரம்

பங்குசந்தை நிலவரம்

போர் பதற்றத்தால் சரிவுஇந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக, இரண்டு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வுக்கு தடை ஏற்பட்டது. 13வது நாளாக அன்னிய முதலீடுகள் வரத்து நீடித்தாலும், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. இந்தியா -- பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடிப்பதால், முதலீட்டாளர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இதனால், சந்தை மேலும் சரிவை கண்டது. நிப்டி குறியீட்டில், அதிகபட்சமாக பொதுத்துறை வங்கி குறியீடு 4.84 சதவீதம் சரிவையும், வாகனத்துறை குறியீடு 0.17 சதவீதம் உயர்வையும் கண்டன. சரிவுக்கு காரணங்கள் இந்தியா -- பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் பதற்றம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு லாபம் குறித்த கவலை  அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவுகள் குறித்த அறிவிப்பு அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பேச்சு தொடர்பான கவலைஉலக சந்தைகள்திங்களன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. தென்கொரியா, ஜப்பான் சந்தைகளுக்கு நேற்றும் விடுமுறை. சீனா, ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.சரிவை கண்ட பங்குகள் - நிப்டி அதானி என்டர்பிரைசஸ்: 4.30% ஜியோ பைனான்ஸ்: 3.68% எட்டர்னல்: 3.00%உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி ஹீரோ மோட்டோகார்ப்: 2.48% பார்தி ஏர்டெல்: 1.61% ஹிந்துஸ்தான் யுனிலீவர்: 1.41%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி