பங்கு சந்தை நிலவரம்
ஹாட்ரிக் அடித்த சந்தை
சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நேற்று உயர்வுடன் நிறைவு செய்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் - மஸ்க் இடையேயான மோதல் காரணமாக உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் சரிவு கண்டிருந்தன. எனினும், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 0.50 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை தொடர்ந்து, ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் வாகனத்துறையை சேர்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்தனர். இதனையடுத்து, சந்தை குறியீடுகள் விறுவிறுவென உயர்வு பாதைக்கு திரும்பின. நேற்றைய வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 858 புள்ளிகள் அளவுக்கு உயர்வு கண்டு பின்னர் சற்று குறைந்து, 746.95 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. நிப்டி குறியீடு 25,000 புள்ளிகளை மீண்டும் தொட்டது. நிப்டி, சென்செக்ஸ் தலா, 1 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன. தொடர்ச்சியாக, மூன்றாவது நாளாக சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன.உயர்வுக்கு காரணங்கள்
1ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக 0.50% குறைத்தது2 ரியல் எஸ்டேட், வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதுஉலக சந்தைகள்
வியாழன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்; ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடு சரிவுடனும் நிறைவு செய்தன. ஐரோப்பியசந்தைகள் கலவையாக வர்த்தகமாகின.உயர்வு கண்ட பங்குகள் --- நிப்டி (%)ஸ்ரீராம் பைனான்ஸ் 5.46பஜாஜ் பைனான்ஸ் 4.90ஜே.எஸ்.டபிள்யு.,ஸ்டீல் 3.56ஆக்ஸிஸ் வங்கி 3.15மாருதி 2.78
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,010 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 0.46 சதவீதம் குறைந்து, 65.04 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்து, 85.68 ரூபாயாக இருந்தது.