உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

ஏற்றத்தில் துவங்கி இறக்கத்தில் நிறைவு

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் இறக்கத்துடன் நிறைவு செய்தன. 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு தயாரிப்பு துறை வளர்ச்சி குறியீடு உச்சம், ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. எனினும், தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான காலக்கெடு நெருங்குவது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் எச்.டி.எப்.சி., வங்கி, லார்சன் அண்டு டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்

செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் கலவையுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடு உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

சரிவுக்கு காரணங்கள்

1தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது2அமெரிக்க வரிவிதிப்பு குறித்த காலக்கெடு நெருங்குவது3முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றது

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 1,562 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.86 சதவீதம் அதிகரித்து, 67.69 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து, 85.62 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை