உள்ளூர் செய்திகள்

பங்கு சந்தை

இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 182 புள்ளிகள் குறைந்து, 81,451 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 83 புள்ளிகள் குறைந்து, 24,751 புள்ளிகளாக இருந்தது. ஐ.டி., துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. நிகர அடிப்படையில் இரண்டாவது வாரமாக இறங்குமுகம் உண்டானது.முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றினர். அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக வரிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை தாக்கம் செலுத்தியது. நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ஏறுமுகம் கண்ட பங்குகள்

1. இடர்னல்- 238.75 (4.58) 2. எஸ்.பி.ஐ.,- 812.40 (1.89) 3. எச்.டி.எப்.சி., வங்கி 1,944.60 (0.81)

இறங்குமுகம் கண்ட பங்குகள்

1. டெக் மகிந்திரா- 1,572.20 (1.73) 2. எச்.சி.எல்., டெக்- 1,637.55 (1.64) 3. ஏசியன் பெயின்ட்ஸ்- 2,260.05 (1.62)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ