ஜெர்மனியின் இ.எஸ்., டெக் ரூ.777 கோடிக்கு டாடா வசமாகிறது
புதுடில்லி : உற்பத்தி பொறியியல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், ஜெர்மனியின் இ.எஸ்., டெக் குழுமத்தை 100 சதவீதம் கையகப்படுத்த, 777 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் உள்ப்ஸ்பெர்க் நகரத்தை தலைமை இடமாக கொண்டு இ.எஸ்., டெக் குழுமம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், அடாஸ் பாதுகாப்பு, டிரைவர் இணைப்பு வசதிகள், டிஜிட்டல் பொறியியல் தீர்வுகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இதில், 300க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதால், ஐரோப்பிய சந்தையில் டாடா நிறுவனத்தின் இருப்பு விரிவடைகிறது. எங்கள் நிறுவனத்தின் வாகன வினியோக தொடரை பலப்படுத்தவும், உலகளவில் இருப்பை அதிகரிக்கவும், புதிய மற்றும் நவீன பொறியியல் திறன்களை எளிதாக அணுகவும், இந்த ஒப்பந்தம் உதவுகிறது. வாரன் ஹேரிஸ் நிர்வாக இயக்குநர், டாடா டெக்னாலஜிஸ்