பேட்டரி ஆற்றல் சேமிப்புக்கு டாடா - என்.எச்.பி.சி., ஒப்பந்தம்
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான என்.எச்.பி.சி.,யிடம் இருந்து, முதல் பேட்டரி ஆற்றல் சேமிப்பு கொள்முதல் ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக, டாடா பவர் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கேரளாவில் 30 மெகாவாட் மின் திறன் கொண்ட பேட்டரி சேமிப்பு அமைப்பை நிறுவுவதை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி மையத்தை 15 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதேபோன்று, என்.எச்.பி.சி.,யிடம் இருந்து 'அக்மி' சோலார் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் 275 மெகாவாட் பேட்டரி மின் ஆற்றல் சேமிப்பு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.அக்மி நிறுவனத்தின் இரு துணை நிறுவனங்கள் வாயிலாக, இரண்டு தனித்தனி பேட்டரி ஆற்றல் சேமிப்பு மையங்கள் வாயிலாக, தலா 275 மெகாவாட் என, மொத்தம் 550 மெகாவாட் மின் சேமிப்பை என்.எச்.பி.சி., பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.