டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் டெக்னிக்கலாக பலவீனம் தெரிகிறது
நேற்று 63 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 132 புள்ளிகள் குறைந்து முடிந்தது.. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமில்லாமலும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டிமைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.38 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.49 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு மட்டும் மாற்றம் ஏதுமில்லாமல் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 13 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிக பட்சமாக 0.41 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 1.93 சதவீத இறக்கத்துடனும் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,582 நிறுவனங்களின் பங்குகளில் 1,555 ஏற்றத்துடனும்; 1,924 இறக்கத்துடனும்; 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. முக்கிய பல சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிப்டி நிறைவடைந்திருப்பதால் நிப்டியில் பலகீனம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது.