உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  இ - காமர்ஸ் ஏற்றுமதியாளருக்கு பிரத்யேக கிரெடிட் கார்டு வசதி மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்

 இ - காமர்ஸ் ஏற்றுமதியாளருக்கு பிரத்யேக கிரெடிட் கார்டு வசதி மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்

புதுடில்லி:இணையதள வழி ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்யேக கிரெடிட் கார்டுகளும், சரக்குகளின் மீதான ஏற்றுமதி கடனும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை, கடந்த வாரம் ஒப்புதல் அளித்த ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இந்த வசதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சிறு,குறு,நடுத்தர தொழில் அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் கூட்டாக இதை செயல்படுத்த உள்ளன. இதற்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மொத்தம் 25,060 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நிர்யத் புரோட்சஹான் மற்றும் நிர்யத் திஷா ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி நிர்யத் புரோட்சஹான் திட்டம், வர்த்தகர்களுக்கான நிதியுதவி, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான வர்த்தக கடன் கிடைப்பதில் உள்ள இடைவெளி ஆகியவற்றை கவனிக்கும். நிர்யத் திஷா திட்டம், ஏற்றுமதியாளர்களுக்கு பல வகையிலும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக துறை செயலர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், “வழக்கமான ஏற்றுமதி கடன் பெற முடியாத இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு இதில் வழங்கப்படும் சலுகைகள் பெருமளவு உதவியாக இருக்கும். வட்டி மானியம், குறைந்த செலவில் ஏற்றுமதி கடன் ஆகியவை பணப்புழக்கத்தையும் அதிகரிக்க செய்யும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ