மேலும் செய்திகள்
ரூ.6 லட்சம் கோடி இழப்பு
26-Oct-2024
• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் கிட்டத்தட்ட ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டது • நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் துவங்கியது. உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, வர்த்தகம் ஆரம்பித்த போதே, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பங்குகள் எழுச்சி கண்டன. இதனால் நேற்றைய தினம், இரண்டு மாதங்களில் சிறந்த வர்த்தக நாளாக மாறியது• நிப்டி குறியீட்டில், அனைத்து துறை சார்ந்த பங்குகளும் உயர்வு கண்டன. குறிப்பாக ஐ.டி.,ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, உலோகத்துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில் 3,013 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 961 நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும்; 89 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---4,446 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர். கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று ஒரு பேரலுக்கு 2 சதவீதம் சரிந்து, 74.02 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் 22 பைசா சரிந்து, 84.31 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை பெல் அதானி என்டர்பிரைசஸ் டி.சி.எஸ்., விப்ரோ எச்.சி.எல்.,டெக்அதிக இறக்கம் கண்டவை எஸ்.பி.ஐ., லைப் டைட்டன் எச்.டி.எப்.சி.,லைப் இண்டஸ்இண்ட் பேங்க் டிரென்ட்
26-Oct-2024